தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரசிகர்களை அடிக்கடி சந்திப்பதும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டுபவர் விஜய்.
எனவே தான், பல ஹீரோக்கள் தங்கள் பட பாடல்களை யூடிப்பில் வெளியிட தன்னுடை பட இசை விழாக்களை ரசிகர்கள் முன்னிலையில் வெளியிட்டும் வருகிறார்.
தற்போது ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கும், தளபதி 63வது படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, நயன்தாரா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இதன் சூட்டிங் தற்போது முதல் சென்னையிலுள்ள பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது.
அங்கு சண்டை காட்சிகள் படமாக்கப்படுகிறதாம்.
இந்த சூட்டிங்கை கேள்விப்பட்ட ரசிகர்கள் அங்கே தினம் தினம் கூடி வருகிறார்களாம்.
எனவே ஓய்வு நேரங்களில் அவ்வப்போது, ரசிகர்களையும் சந்தித்து வருகிறார் தளபதி.