தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என இளைஞர்கள் போராடியதற்கு வீடியோ பதிவில் விஜய் ஆதரவு குரல் கொடுத்திருந்தார்.
அதன்பின்னர் நடிகர் சங்கம் தொடர்பான நடத்தப்பட்ட மௌன போராட்டத்தில் ரஜினி, கமல், அஜித், சூர்யா, விக்ரம் கலந்து கொண்டபோதிலும் விஜய் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் போராட்டம் நடைபெறும் மெரினா கடற்கரைக்கு நள்ளிரவு 2.30 மணிக்கு சென்று கலந்து கொண்டுள்ளார்.
ஆனால் தன் முகத்தை மறைத்தபடியே மக்களோடு மக்களாக அவர் 2 மணி நேரம் அமர்ந்துள்ளார்.
தன்னை மக்கள் கண்டு கொண்டுவிட்டால் போராட்டம் திசை மாறும் என்பதால் விஜய் அப்படி செய்தாராம்.
ஆனால் சில ரசிகர்கள் கண்டுக் கொண்டு விஜய்யை போட்டோ பிடித்து இணையத்தில் பதிவேற்றியது தனிக்கதை.
Vijay participated in Students protest for Jallikattu at Marina Beach