தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கிட்டதட்ட 3 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது.
கடந்த 3 மாதங்களாக ஊரடங்கில் சில தளர்வுகள் இருந்தாலும் செப்டம்பர் முதல் சினிமா சூட்டிங்குக்கு அனுமதியளிக்கப்பட்டது.
தமிழக அரசும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளித்து 75 பேருடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தது.
சின்ன சின்ன பட்ஜெட் படங்களின் சூட்டிங் ஆரம்பமாகிவிட்டது.
ஆனால் முன்னணி நடிகர்களின் படங்களின் சூட்டிங் ஆரம்பமாகவில்லை.
இந்த நிலையில் டாப் ஹீரோ விஜய்சேதுபதி சூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார்.
ஆனால் இது சினிமா சூட்டிங் இல்லையென்றும் ஆன்லைன் ஓடிடி நிறுவனத்திற்கான வெப் சீரிசின் படப்பிடிப்பு எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார்.
ஊரடங்கில் வெண் தாடி, முடியுடன் இருந்த விஜய் சேதுபதி, தற்போது ப்ளாக் டை அடித்து மீண்டும் இளமையாக காணப்படுகிறார்.
Vijay Sethupathi in new web series updates