தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இப்படத்தின் டீசர் நாளை மறுநாள் மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என இப்பட தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ’2.ஓ’ படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
லைகா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.
இப்படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பதை சில தினங்களுக்கு முன் அறிவித்தனர்.
இந்நிலையில் இப்படத்தில் ரஜினியை எதிர்க்கும் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அழுத்தமான வில்லன் கேரக்டர் என்பதால் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டு இருப்பதாகவும் அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
Vijay Sethupathi likes to play villain for Rajini in Karthik Subbaraj movie