தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘மாஸ்’ ஹீரோவாக வலம் வரும் போதே மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் விஜய்சேதுபதி.
இதற்கு முன்பே பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் பிரபல ஹீரோவுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யஷ் நடிப்பில் உருவாகும் கே.ஜி.எஃப் 2 படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரசாந்த் நீல்.
இதையடுத்து பிரபாஸை ஹீரோவாக வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல்
இந்தப் படத்தை கே.ஜி.எஃப் படங்களை தயாரித்த, ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க, விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
மக்கள் செல்வனும் அதில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.
Vijay Sethupathi to play antogonist in prabhas next film