தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மேலும் மார்ச் 23ஆம் தேதி முதல் வெளியூர், மற்றும் வெளிநாட்டில் சூட்டிங் நடத்தப்பட கூடாது என விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டது.
ஆனாலும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த விஜய் 62, நாடோடிகள் 2, உள்ளிட்ட 4 படங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கான விளக்கத்தை தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜ் தெரிவித்தார்.
இன்று மார்ச் 24ஆம் தேதி ஆகிவிட்ட நிலையில் கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சாயிஷா நடிக்கும் ‘ஜுங்கா’ படக்குழுவினர் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றுள்ளனர்.
அந்த நாட்டில் 10 நாட்கள் சூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஸ்டிரைக் அறிவிக்கப்படுவதற்கு முன்பே போர்ச்சுக்கல் செல்ல விமான டிக்கெட், படப்பிடிப்பு அனுமதி ஆகியவை பெறப்பட்டு இருப்பதால் படக்குழு செல்ல வேண்டிய கட்டயா சூழ்நிலை என கூறப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் விஜய்யை போல விஜய்சேதுபதியும் இப்படி செய்யலாமா? என திரையுலகினரே தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
வேலை நிறுத்தம் என்றால் இழப்பு வரத்தான் செய்யும். அதற்காக நாம் ஒற்றுமை இல்லாமல் இப்படி செய்வது சரியாகுமா? என கேட்கின்றனர்.
Vijay sethupathis Junga shooting happening during Cinema Strike