தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1980களில் ரஜினி கமல் உச்சத்தில் இருந்தபோதே அவர்களுக்கு இணையாக ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நடிகர் மோகன்.
இவரது படங்களும் சரி பாடல்களும் சரி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இவருடைய படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா படங்களே. எனவே இவரை வெள்ளி விழா நாயகன் என்று அழைப்போரும் உண்டு.
இவரது படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு என்றே தனி ரசிகர்கள் ரசிகைகள் பட்டாளமும் உண்டு.
90கள் வரை நடித்து வந்த இவர் ஏனோ சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். ஓரிரு படங்களில் பின்னர் நடித்தாலும் அவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதன்பின்னர் பிரபல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என பலர் இவரை நடிக்க அழைத்தாலும் ஏனோ வரவில்லை.
ஆனால்…. என்ன மாயம் மந்திரம் செய்தாரோ-? நடிகர் மோகனை கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு அதே ஹீரோவாகவே நடிக்க அழைக்க வந்துவிட்டார் இயக்குனர் விஜய்ஸ்ரீ.
இவர்கள் இணையும் படத்தின் அறிவிப்பை 2022 புத்தாண்டு பிறந்த தினத்தில் வெளியிட்டனர்.
‘ஹரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக குஷ்பூ நடிக்கிறார். மோகனுடன் குஷ்பூ இணையும் முதல் தமிழ் படம் இதுவாகும். தயாரிப்பாளர் எஸ்.பி.மோகன்ராஜ் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
இந்த நிலையில் ‘ஹரா’ படத்தின் முதற்கட்ட சூட்டிங்கை சென்னையில் ஓரிரு தினங்களுக்கு முன் தொடங்கிவிட்டார் விஜய்ஸ்ரீ.
அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகளில் மோகனை நடிக்க வைத்து படமாக்கியிருக்கிறார்.
80களில் மோகன் நடித்தபோது பெரும்பாலும் ரொமான்டிக் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது அவரை ஆக்சன் ஹீரோவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர்.
இது தொடர்பான போஸ்டர்களில் டெரர் லுக்கில் தாடியுடன் காணப்படுகிறார் மோகன்.
ஹராவின் கதைப்படி சட்ட நுனுக்களை சாமானியனும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என கதைக்களம் அமைத்திருக்கிறாராம் விஜய்ஸ்ரீ.
‘ஹரா’ படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பை கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மாதம் நடத்தவிருக்கிறார்களாம்.
ம்…ம்… அப்படின்னா ‘ஹரா’…. வேற லெவல் தான்…
Vijay Sri kick starts his Haraa with Mohan in Action mode