தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினியின் ‘பேட்ட’ & தனுஷின் ’ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களை தொடர்ந்து விக்ரம் 60 படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.
இதில் ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளனர்.
இந்த படம் ஒரு கேங்க்ஸ்டர் படம் என கூறப்படுகிறது.
துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க விக்ரம் வில்லன் வேடத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதால் விரைவில் இப்பட படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
இதற்காக படக்குழு கொடைக்கானலில் லொகேஷன் பார்த்து முடிவு செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனவே விரைவில் விக்ரம், துருவ் விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் உள்பட படக்குழுவினர் கொடைக்கானல் செல்லவிருக்கிறார்களாம்.
Vikram and Dhruv starts shooting for Vikram 60