ரஜினி-விஜய்யை முந்த வேண்டும்; சொல்லி அடித்த அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தை சத்யஜோதி நிறுவனத்திற்காக இயக்குநர் சிவா இயக்கி வருகிறார்.

கடந்த மே 11ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகி தென்னிந்தியளவில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது-

வெளியான சில மணி நேரங்களிலேயே கபாலி, தெறி ஆகிய படங்கள் இதற்கு முன் செய்த சாதனைகளை முறியடித்துள்ளது.

விவேகம் டீசரில் அஜித் பேசிய never ever give up… என்கிற டயலாக்கை தற்போது தாரக மந்திரமாகவே ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் டீசர் வெளியான 68 மணி நேரத்தில் 10 மில்லியன் (ஒரு கோடி) பார்வையாளர்களை பெற்றுள்ளது.

டீசர் வெளியாவதற்கு முன்பே கபாலி, தெறி டீசரை முறியடிக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.

தற்போது அதை வெற்றிகரமாக தற்போது செய்து காட்டியுள்ளனர்.

Vivegam teaser break Kabali and Theri records

‘தனுஷ் ரொம்பவே இம்ப்ரஸ் செய்துவிட்டார்…’ விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கிவரும் கதாநாயகன் படத்தை தயாரித்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

கேத்ரீன் தெரசா நாயகியாக நடிக்க, சூரி காமெடியனாக நடிக்கிறார்.

சீன் ரோல்டான் இசையைமைத்துள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளாராம்.

ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இதன் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக்கை இன்று தனுஷ் வெளியிட்டார்.

இதுகுறித்து விஷ்ணு விஷால் கூறியதாவது…

கதாநாயகன் பர்ஸ்ட் லுக்கை தனுஷ் வெளியிடுகிறார். அவர் என்னை ரொம்பவே இம்ப்ரஸ் செய்துவிட்டார்” என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

Dhanush impressed me lot says Kadhanayagan Vishnu Vishal

‘This is sure shot winner’… அர்ஜுனின் ‘நிபுணன்’ டீசரை பாராட்டிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Passion ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம், மற்றும் அருண் வைத்யநாதன் தயாரிக்கும் படம் ‘ நிபுணன்’.

இதில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து இயக்குனர் அருண் வைத்யநாதன் கூறியுள்ளதாவது…

அர்ஜுன் சாரின் 150ஆவது படத்தை தயாரித்து இயக்குவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

150 படங்களையும் கடந்த அவரது உன்னத உழைப்புக்கும், சற்றும் குறையாத அவரது உற்சாகத்துக்கும் ஈடு இணை இல்லை என்று தான் சொல்லுவேன்.

அவரது சாதனையை கொண்டாடும் விதமாக ‘நிபுணன்’ படக் குழுவினர் இந்தப் படத்தின் டீசரை 150 திரை உலக பிரபலங்கள் மூலமாக ட்வீட் செய்து வாழ்த்த வேண்டும் என திட்டமிட்டோம்.

ஆயினும் எங்களுள் ஒரு தயக்கம், இது சாத்தியமா,நடக்குமா, அவ்வாறு ட்வீட் செய்ய அவர்கள் ஒப்புக் கொள்வார்களா என்ற ஐயத்தோடு தான் அவர்களை அணுகினோம். அர்ஜுன் சார் மேல் திரை உலக கலைஞர்கள் வைத்து இருக்கும் மரியாதை என்னவென்று நாங்கள் அறிந்துக் கொண்ட தருணம் இது.

நாங்கள் அணுகிய திரை உலக கலைஞர்கள் எல்லோரும் உடனடியாக ஒப்புக் கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்னர், அர்ஜுன் சார் உட்பட எங்கள் படக் குழுவினர் ரஜினி காந்த் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற சென்றோம்.

அப்போது அவர் ‘நிபுணன்’ படத்தின் டீசரை பார்த்தார். மிக மிக உற்சாகமாகி எங்களை பாராட்டினார்.

‘This is sure shot winner’ என்று அவருக்கே உரிய பாணியில் பாராட்டியதோடு , படம் வெளிவரும் நேரம் தான் நிச்சயம் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தெரிவித்தார்.

அர்ஜுன் சாருக்கும் , ரஜினி சாருக்கும் இருந்த பரஸ்பர அன்பையும் மரியாதையையும் கண்டு நாங்கள் வியந்துப் போனோம்.

நிபுணன் டீசர் வருகின்ற 15ஆம் தேதி வெளி வர உள்ளது. அர்ஜுன் சாருடைய உழைப்பை கொண்டாட எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன் என்று பெருமையோடுக் கூறினார் இயக்குனர் அருண் வைத்யநாதன்.

Rajinikanth prasies Arjun and his Nibunan Teaser

விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இத்தனை ட்ரீட்டா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்க, ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது விஜய் 61 படம்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இம்மாத இறுதியில் அல்லது விஜய் பிறந்தநாளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்தாண்டு விஜய் பிறந்தநாளை இப்போதே 45 நாட்கள் உள்ளன, 40 நாட்கள் உள்ளன என விஜய் ரசிகர்கள் டிரெண்ட்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் பிறந்தநாளில், ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்த விஜய் 62 படத்தின் அறிவிப்பும் வெளியாகும் எனத் தெரிகிறது.

Vijay fans may have may treats on his Birthday

பெல்ஜியத்தில் 100 நாட்கள்… தனுஷின் ஹாலிவுட் பயணத் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து தயாரிப்பாளராக மல்லுவுட்டில் களம் இறங்கியுள்ளார் தனுஷ்.

இதனையடுத்து முதன்முறையாக ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

’தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த பகிர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்குகிறது.

இதற்காக பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸ் சென்றுள்ளார் தனுஷ்.

இதன் ஷூட்டிங் முதலில் மும்பையில் நடப்பதாக இருந்தது.

ஆனால் தற்போது லொகேஷன் பிரஸ்சல்சுக்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிட்டதட்ட அங்கு 100 நாட்கள் படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது.

இரானிய இயக்குனர் மர்ஜான் சத்ரபி படத்தை இயக்க, தனுஷ் ஜோடியாக ‘தி ஆர்டிஸ்ட்’ படத்தில் நடித்த பெரினீஸ் பெஜோ நடிக்கிறார்.

இவர்களுடன் எரில் மொரியார்ட்டி, பர்கத் அப்டி, இந்தி நடிகை ’பண்டிட் குயின்’ சீமா பிஸ்வாஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

Dhanush fly to Belgium for ollywood movie shoot The Extraordinary Journey of the Fakir

படம் தயாரிக்கும் சிவகார்த்திகேயன்; இயக்குனர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்ராஜ் இயக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதனையடுத்து பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

அதன்பின்னர் இன்று நேற்று நாளை படப்புகழ் ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த இரு படங்களை முடித்துவிட்டு ‘இறுதிச்சுற்று’ இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் அண்மையில் இப்படத்தை ஏ.எம். ரத்னம் தயாரிப்பதாக தகவல்கள் வந்தன.

ஒருவேளை இருவரும் இணைந்து தயாரிக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Sivakarthikeyan will produce the movie which will be directed by Irudhi Suttru Sudha Kongara

More Articles
Follows