தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்தியா நாடெங்கிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று மே 16 முதல் வரும் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கைப் பிறப்பித்துள்ளார்.
மளிகை, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் செயல்படலாம்.
இவையனைத்தும் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.
பெட்ரோல் பங்குகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம்.
தொழிற்சாலைகள் இயங்கத் தடை.
மேற்கு வங்கத்தை் தொடர்ந்து டெல்லியிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டெல்லியில் ஏற்கெனவே ஊரடங்கு அமலில் உள்ளதால் கொரோனா பாதி்ப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஆனாலும் கொரோனாவால் நேற்று மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 328 ஆக உள்ளது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு அடுத்த வாரம் 23ம் தேதி வரை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இப்போது 4வது முறையாக முழு ஊரடங்கை நீட்டித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
West Bengal and Delhi Government Covid 19 Lockdown updates