தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மையில் அமெரிக்கா சென்று வந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.
இதனையடுத்து அவர் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு பாசிட்டிவ் உறுதியான நிலையில் அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 வாரங்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறவுள்ளார்.
இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை வேறு ஒருவர் தொகுத்து வழங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு மற்றொரு காரணமும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். அவர் சில நாட்கள் நடத்த முடியாத சூழ்நிலை உருவான போது அப்போதைய மருமகள் நடிகை சமந்தா அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தற்போது அந்த பாணி இங்கேயும் கடைப்பிடிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
Who will host bigg boss tamil 5 here after?