தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதன்பின்னர் 2 ஆண்டுகளாக அரசியல் கட்சி பற்றி பேசவில்லை.
ஆனாலும் ரஜினி மக்கள் மன்ற பணிகள் & முக்கிய ஆலோசனைகளையும் செய்து வந்துள்ளார் ரஜினி.
இந்தாண்டு மார்ச் 12ல் அரசியல் குறித்த தனது தொலைநோக்கு பார்வையை விளக்கினார்.
அப்போது முதல்வர் பதவிக்கு திறமையான ஒருவரை முன்னிறுத்தி ஆட்சி மற்றும் கட்சியை வழிநடத்துவேன் என்றார்.
தனக்கு முதல்வராகும் எண்ணம் இல்லை. சட்டசபையில் தான் அமர்வதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்றார்.
இது அவருடைய ரசிகர்களுக்கு கசந்தாலும் முதல்வர் வேட்பாளர் ரஜினி இல்லை என்பதால் அரசியல் எதிரிகளுக்கு இனிப்பான செய்தியாக மாறியது.
ரஜினி அறிவித்த சில தினங்களில் கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவ ஆரம்பித்து, 7 மாதங்களுக்கு ஊரடங்கு நீடிக்கிறது.
இதனால் ரஜினி கட்சி அறிவிப்பு & கட்சி மாநாடு உள்ளிட்டவைகள் தாமதமாகிப் போனது.
எனவே ரஜினி நிஜமாகவே கட்சி ஆரம்பிப்பாரா? என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே உருவானது.
ஆனால் கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கினாலும் கட்சி பணிகளை கனகச்சிதமாக செய்துள்ளாராம் ரஜினிகாந்த்.
அப்போது தனக்கே உரிய பாணியில் 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோக்களை ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.
அதன்படி வரும் 26-ந்தேதி விஜயதசமி நாளில் கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடலாம் என்ற பரபரப்பு தகவல் உலா வருகிறது.
Will Rajinikanth announce political party in vijayadasami?