தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாளத்தில் ‘லால் பகதூர் ஷாஸ்த்தி’, ‘வரி குழியிலே கொலபாதகம்’, ‘இன்னு முதல்’ என மூன்று ஹிட் படங்கள் டைரக்ட் செய்தவர் ரெஜிஷ் மிதிலா.
இவர் ‘யானை முகத்தான்’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.
இதில் விநாயகர் வேடத்தில் நடித்துள்ளார் யோகி பாபு. இவருடன் ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்
எழுத்து, இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
தயாரிப்பாளர்கள்: ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ்:
தயாரிப்பு நிறுவனம்: தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
ஒளிப்பதிவு : கார்த்திக்Sநாயர்
படத்தொகுப்பு : சைலோ
இசையமைப்பாளர்: பரத் சங்கர்
ஆடை வடிவமைப்பாளர்: குவோச்சாய்.S
ஒப்பனை: கோபால்
நிர்வாக தயாரிப்பு : சுனில் ஜோஸ்
தயாரிப்பு மேற்பார்வை : ஜெயபாரதி.
சமூக பக்தி பாணியில் தயாராகி இருக்கும் இந்தப்படத்தை தி கிரேட் இந்தியன் சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ரஜீஷ் மிதிலா மற்றும் லிஜோ ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன் இந்த படம் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் தற்போது இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதற்கு சில காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் முதன்முறையாக படத்தின் ரிலீசை தள்ளி வைப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை என அறிவித்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
“காரணம் இல்லாமல் தள்ளி வைக்கிறோம்.. #யானைமுகத்தான் படக்குழுவினர் அதிரடி அறிவிப்பு..!!”
#YaanaiMugathaan worldwide release postponed from April 14 to April 21 now.
Due to ‘*NO*’ Reason..
@iYogiBabu @thilak_ramesh
@RMidhila #Karunakaran
@sonymusic_south @johnsoncinepro
Yaanai Mugathaan worldwide release postponed from April 14 to April 21