தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர்கள் : கலையரசன், ஷிவதா நாயர், ஜனனி ஐயர், பால சரவணன் மற்றும் பலர்.
இயக்கம் : ரோகின் வெங்கடேசன்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவாளர் : ரவிவர்மன் நீலமேகம்
எடிட்டிங்: லியோ ஜான் பால்
பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்
தயாரிப்பாளர் : சிவி. குமார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்
கதைக்களம்…
படத்தின் முதல் காட்சியே ஒரு கார் விபத்தில் தொடங்குகிறது.
தனது 16 வயதில் கண் பார்வையை இழந்த கலையரசனுக்கு அப்போது வயது 25. இவர் ஒரு ரெஸ்ட்டாரண்ட் நடத்தி வருகிறார்.
இவரின் தோழியாக வரும் ஜனனி இவரை காதலிக்கிறார். ஆனால் கலையரசனுக்கோ தன்னுடைய வாடிக்கையாளரான ஷிவதா மீது ஒரு கண். (மன்னிக்கவும்) ஒரு காதல்.
ஒரு சூழ்நிலையில் ஷிவதாவுக்கு உள்ள கடன் பிரச்சினையை சமாளிக்க பெரிய தொகை கொடுத்து உதவ நினைக்கிறார்.
அதற்குள் இவருக்கு விபத்து ஏற்பட ஷிவதா காணாமல் போகிறார்.
பின்னர் அவரை தேடும் முயற்சியில் இறங்க அடுத்து அடுத்து பல சுவாரஸ்ய முடிச்சிகளை போட்டு ஒன்றன் பின் ஒன்றாக திரையில் அவிழ்த்து நம்மை சீட்டில் கட்டிப் போடுகிறார் இயக்குனர்.
கதாபாத்திரங்கள்…
பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தாலும் இதில் முழு ஹீரோவாக கதையை தாங்குகிறார் கலையரசன். இனி இவர் தொடர்ந்து இதே ரூட்டில் பயணிக்க வாழ்த்துக்க.ள
மெட்ராஸ் படத்தில் பார்த்த கலையரசனின் ரொமான்ஸ் இதில் மிஸ்ஸிங்.
அதே கண்கள் படத்தில் ஒரு கண் கலையரசன் என்றால் மற்றொரு கண் ஷிவதா.
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மற்றொரு நீலாம்பரி, ருத்ரா என ஷிவதாவை சொல்லலாம்.
ஹோம்லியாகவும் ஜொலிக்கிறார். வில்லியாகவும் விளாசுகிறார். சிக்ஸர் அடித்து விடுகிறார் ஷிவதா.
ஜனனிக்கு பெரிய இடமில்லையென்றாலும் நிச்சயம் குறை வைக்கவில்லை.
பாலசரவணன் சீரியஸ் படத்தை கொஞ்சம் கலகலப்பாக்கி இருக்கிறார். ஆனால் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஜிப்ரான் இசையில் பாடல்கள் இனிமை.
தந்திரா பாடல் நிச்சயம் அப்ளாஸை அள்ளும். ஷிவதா வரும் காட்சிகளில் பாடலோடு வரும் பின்னணி இசை ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா போனஸ்.
படத்தின் மற்றொரு பலம் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகம்தான்.
பகல் காட்சியானலும் இரவு காட்சியானாலும் தன் கேமரா மூலம் அழகு சேர்த்துவிடுகிறார்.
படத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ்…
- விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் கதைக்களம்
- ஷிவதா நாயரின் கேரக்டரும் அவரின் கெத்தும்
- என்னதான் கலையரசன் மீடியா என்று சொன்னாலும் ஒரு ஐடி கார்டு கூட கேட்கமாட்டாரா? போலீஸ்.
- போலீசுக்கு தெரியாதது சீக்ரெட்ஸ் எல்லாம் கலைக்கு மட்டுமே தெரிகிறது.
இயக்குனர் பற்றி…
படத்தில் ஆக்ஷன் இல்லை என்றாலும் விறுவிறுப்பு உடன் காட்சியை நகர்த்துகிறார் டைரக்டர்.
முதல் பாதி சற்று டல் அடித்தாலும் இரண்டாம் பாதியில் ஸ்பீடை ஏற்றி ரசிக்க வைத்து விடுகிறார்.
படத்தின் க்ளைமாக்ஸை பார்த்தால் நிச்சயம் இரண்டாம் பார்ட் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதே கண்கள்.. அம்சமான கண்கள்