தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜெனித்குமார் இயக்கத்தில் மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைத்ரா’.
நவம்பர் 17- ம் தேதி ‘சைத்ரா’ வெளியான இப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.
கதைக்களம்…
பேய் படம் என்றாலே ஒரு பெரிய பங்களாவில் பேய் குடி இருக்கும்.. அதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கும்.. இந்த டெம்ப்ளேட் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சினிமாவில் மாறாது போல.. அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொரு சைத்ரா இந்த படம்.
டிடெக்டிவ் ஏஜென்ட் திவ்யா தன் அண்ணன் போலீஸ் உதவியுடன் தன் நண்பன் இருக்கும் இடத்தை தேடி அலைகிறார். ஒரு கட்டத்தில் ஒரு சாமியாரிடம் உதவி கேட்டு வடக்கு வீதியில் உள்ள ஒரு பெரிய பங்களாவை தேடி கண்டுபிடிக்கிறார்.
அங்கு பூஜா மற்றும் அவரது கணவரும் நாயகி சைத்ரா (யாஷிகா ஆனந்த்) தேடி வருகின்றனர்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மூவரும் உள்ளே செல்ல அங்கே திவ்யா நண்பன் கொல்லப்பட்டு இறக்கும் தருவாயில் கிடக்கிறார்.
கொலை உடலைப் பார்த்த பூஜாவும் அவர் கணவரும் வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர். வேறு வழியின்றி நண்பனை திவ்யா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கே மருத்துவமனையில் டாக்டரின் டேபிளில் பூஜா மற்றும் அவர் கணவர் மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக வந்த செய்தியை நியூஸ் பேப்பரில் பார்க்கிறார் திவ்யா.
அப்படி என்றால் இதற்கு முன்பு நடந்தது என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ் & டெக்னீசியன்கஸ்…
மிகப்பெரிய விபத்திற்குப் பிறகு யாஷிகா ஆனந்த் இதில் நடித்திருக்கிறார்.. எந்த விதத்திலும் அவரது நடிப்பும் சரி அவரது கேரக்டரும் சரி ஒரு துளி கூட சுவாரசியம் இல்லை.
அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்க சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஒளிப்பதிவு ஓகே.. ஆனால் பின்னணி இசை வேஸரட்.. கதை திருநெல்வேலியில் நடப்பதால் மலையாளம் கலந்த தமிழை வசனங்களில் கேட்க முடிகிறது..
பயமுறுத்தும் பேய் படங்கள் காமெடி செய்யும் பேய் படங்கள் என பல வகை உண்டு. ஆனால் சைத்ரா எந்த வகை என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.
ரேடியோக்களில் நாம் கேட்கும் ஒலிச்சித்திரம் போல.. “கத்தியை எடுத்துக் கொண்டு வா என்று சொன்னால்.. கத்தி எடுக்கப் போகிறேன்.. கத்தி எடுத்துக் கொண்டு வருகிறேன்.. இந்தா கத்தி என்பது போல பல வசனகாட்சிகள் உள்ளன.
இவை எல்லாம் நாம் காட்சியாக பார்க்கும்போது இத்தனை வசனங்கள் தேவையா ? படம் முழுக்க இதுபோன்ற நாடகத் தன்மையான காட்சிகள் உள்ளன. ஒரு நாடகம் பார்ப்பது போன்ற உணர்வையே தருகின்றன
திரைக்கதை அமைத்து விதத்தில் இயக்குநர் ஜெனித் குமார் நம் பொறுமையை பேயளவுக்கு சோதித்து விட்டார்.
யாஷிகாவை விட டிடெக்டிவ் திவ்யா ஆக வரும் சக்தி அழகில் நம்மை ஈர்க்கிறார்.
குறைந்தபட்சமாக 10 கேரக்டர்களை வைத்து படத்தை முடித்து விட்டார் இயக்குனர்.. அதற்கு நாம் பாராட்டு தெரிவிக்கலாம்..
Chaitra movie review and rating in tamil