தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
திரில்லர் கதைகள் என்றாலே எப்போதும் ரசிகர்களுக்கு சுவாரசியம் தான்.. அதிலும் கொலை கொள்ளை போலீஸ் விசாரணை என்றால் ரசிகர்களுக்கு பேரார்வம் இருக்கும். அந்த வரிசையில் இணைந்துள்ள படம் சக்ரவியூஹம்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள்.
கதைக்களம்…
சஞ்சய் ராவின் (விவேக் திரிவேதி) மனைவி சிரி (ஊர்வசி ) தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார். மேலும் வீட்டில் இருந்து ஒரு கோடி மதிப்புள்ள பணம் மற்றும் தங்கமும் காணாமல் போகிறது.
இதனால் போலீஸ் விசாரணை தொடங்குகிறது. அதிகாரி எஸ்ஐ சத்யா. (அஜய்) தனது விசாரணையை முறுக்குகிறார்.
இந்த விசாரணையில் முதலில் சஞ்சய் தான் குற்றவாளி என நினைக்கிறார். ஒரு கட்டத்தில் விசாரணை சூடுபிடிக்க சஞ்சய் ராவின் நெருங்கிய நண்பரும், பிசினஸ் பார்ட்னர் ஷரத்தை சந்தேகிக்கிறார்.
இத்துடன் நகை காணாமல் போனதால் சத்யா சிரியின் வீட்டு வேலைக்காரி மீதும் சந்தேகம் கொள்கிறார்.
எந்த தடயமும் கிடைக்காமல் தவிக்கிறார் போலீஸ் அதிகாரி எஸ்ஐ சத்யா. (அஜய்).
ஸ்ரீயை உண்மையில் கொன்றது யார்? அவரை கொலை செய்ய என்ன காரணம்.? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்..
அஜய், ஞானேஸ்வரி, விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு
கதையின் நாயகனாக அஜய் கம்பீரமான லுக்கில் வருகிறார். விசாரணை நடவடிக்கைகள் ரசிக்க வைக்கிறது.
இவருடன் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவியுள்ளன.
முக்கிய கேரக்டர்களில் ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு ஆகியோரும் உண்டு்.
டெக்னீசியன்கள்…
இயக்குனர்: சேத்குரி மதுசூதன்
தயாரிப்பாளர்கள்: சஹஸ்ரா கிரியேஷன்ஸ்
இசையமைப்பாளர்: பாரத் மஞ்சிராஜு
ஒளிப்பதிவு: ஜி.வி.அஜய் குமார்
எடிட்டர்: ஜெஸ்வின் பிரபு
எதிர்பாராத ட்விஸ்ட் திருப்பங்கள், அதிரடி ஆக்சன் என படம் வேகமெடுக்கிறது.
விறுவிறுப்பான த்ரில்லர் கதையால் நம்மை கதையுடன் ஒன்ற வைக்கிறார் இயக்குனர்.
இசையும், ஒளிப்பதிவும் ஓகே ரகம். சில சீன்களில் கூடுதல் பலம் கொடுக்கிறது.
வெறுமனே க்ரைம் த்ரில்லராக இல்லாமல் , நல்ல கருத்தை சொல்லும் விதமான படமாக உருவாகியுள்ளது.
ஆசை இருக்கலாம். ஆனால் பேராசை ஆபத்து என்பதே மையப்படுத்தி சக்ரவியூகத்தை கொடுத்துள்ளார்.
ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது இந்த சக்ரவியூகம்.
Chakravyuham movie review and rating in tamil