தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கவுஷல் உள்ளிட்டோர் நடிந்துள்ளனர்.
ஒன் லைன்..
விசா இல்லாமல் திருட்டுத்தனமாக மற்ற நாடுகளுக்கு செல்கின்றனர். இதை கழுதை செல்லும் பாதையை இந்திய மொழியாக்கமாக டங்கி.
ஸ்டோரி…
3 நண்பர்கள் & 1 தோழி விசா இல்லாமல் ஒரு நாட்டிற்கு செல்ல நினைக்கின்றனர். இதற்காக 25 வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கானை தொடர்பு கொள்கிறார் டாப்ஸி. உதவி கேட்கிறார். ஷாருக்கும் உதவி செய்கிறார்.
இவர்கள் சட்ட விரோதமாக மற்றொரு நாட்டிற்கு செல்ல என்ன காரணம்? ஷாருக்கானுக்கும் டாப்ஸீக்கும் இதற்கு முன்பு இருந்த உறவு என்ன? இவர்கள் எல்லாம் யார்? இவர்கள் தப்பிச்செல்ல நினைக்க என்ன காரணம்? என்பதுதான் படத்தின் மீதிகதை.
கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…
சமீபத்தில் வெளியான இளைஞர் வயதானவர் என மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருந்தார் ஷாருக்கான். அது இந்தப் படத்திலும் தொடர்கிறது.
சேவிங் செய்தால் இளைஞர்.. டை அடித்தால் வயதானவர் என தோற்றங்களில் மற்றும் பாடி லாங்குவேஜிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார் ஷாருக்கான்
இங்கிலாந்து நீதிமன்றத்தில் மறைந்த நண்பனின் சாம்பல் அஸ்தியை வைத்துக்கொண்டு பேசும் வசனம் செம. அதுபோல கிளைமாக்ஸ் காட்சியிலும் பின்னி பெடல் எடுத்து விட்டார் ஷாருக்கான்.
டாப்சியின் நடிப்பு டாப் லெவல். வயதானவர் இளையவர் என இரண்டு தோற்றங்களில் அசத்தியிருக்கிறார். ஆனால் தமிழ் சினிமாவில் தான் டாப்சிக்கான கேரக்டர் கிடைக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. ஷாருக்கிடம் மல்யுத்தப் பயிற்சி எடுக்கும் காட்சி வேற லெவல்.
இங்கிலாந்து சென்ற காதலியை மீட்க விக்கி போராட அது முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விக்கி கௌஷல் நடிப்பில் மிரட்டல்.
மேக்கிங் பாராட்டும்படியாக இருந்தாலும் ஒரு ராணுவ வீரர் சட்டவிரோதமாக மற்ற நாடுகளுக்கு தப்பிச் செல்ல உதவுவது எல்லாம் நம்பும் படியாக இல்லை.ஒரு தேசப்பற்று மிக்கவர் இப்படி நடந்து கொள்வாரா என்பது கேள்விக்குறி??
காரியமாக வேண்டுமென்றால் காலை பிடிப்பது காரியம் முடிந்தவுடன் கழட்டி விடுவது என சில சுயநலவாதிகளின் உருவமாகவே டாப்ஸி வருகிறார்.
அதிலும் முக்கியமாக இந்தியாவை வெறுக்கும் நபராக டாப்சி வருகிறார். அப்படி இருக்கும் போது அவருக்கு ஒரு இந்தியர் ஏன் உதவுகிறார்?
படத்தில் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்கும் படி வகையில் உள்ளது. முக்கியமாக ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கிறது.
ஹிந்தியில் 3 இடியட்ஸ் , முன்னாபாய் எம்பிபிஎஸ் மற்றும் பிகே போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. இவர் தற்போது இயக்கியுள்ள படம் தான் டங்கி.
சட்ட விரோதமாக தப்பித்துச் செல்வது உள்ளிட்ட பல காட்சிகள் இருந்தாலும் ஒரு கட்டத்தில் விசா இல்லாமல் தப்பிக்க சென்றால் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதையும் ஒரு எச்சரிக்கை பதிவாக செய்திருக்கிறார் டைரக்டர்.
ஆக இந்த டங்கி ரசிகர்களுக்கு பிடித்த பீரங்கியாக இருக்கும் என நம்பலாம்..
Dunki movie review and rating in tamil