தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒன்லைன்..
இன்ட்ரஸ்ட் இந்திரன் (ரவி மரியா)விடம் நண்பனுக்காக வட்டிக்கு பணம் வாங்கி மாட்டிக் கொள்கிறார் அசோக் செல்வன். எனவே அவரை மிரட்டி அனுப்பி வைக்கிறார் ரவிமரியா.
அப்போது ரவிமரியாவின் மகள் பிரியா.. அசோக் செல்வனுக்கு பணம் கொடுத்து உதவ வருகிறார். ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதாவது தன்னை உன்னுடைய ஆண்கள் விடுதிக்குள் (ஹாஸ்டலுக்கு) அழைத்துச் செல் என்கிறார். (அதற்கான காரணம் ஒரு ப்ளாஷ்பேக்..)
எனவே பிரியாவை ஹாஸ்டலுக்கு அழைத்துச் செல்கிறார் அசோக். அதன்பின்னர் என்ன ஆனது? ஆண்கள் விடுதியில் சிக்கிய அழகியின் கதி என்ன? எப்படி உள்ளே போனார்? எப்படி வெளியே வந்தார்? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்..
ஜாலியான கேரக்டர் அசோக் செல்வனுக்கு.. சில இடங்களில் நன்றாகவே நடித்துள்ளார். மாணவர்கள் படிப்பதை காண்பிப்பதை விட குடிப்பதை மட்டுமே காட்டியிருக்கிறார்கள்.
இவரின் நண்பராக சதீஷ் நடித்துள்ளார். ஒரு காட்சியில் ஜீவா வெளியே வாடா என்கிறார். ஓ.. அது என்னோட பெயராச்சே.. என காமெடி செய்கிறார். (இதுபோன்ற மொக்க காமெடி தேவையா ஜீ)
இனிக்குதா? கசக்குதா.? காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம்
பிரியா பவானி சங்கர் திறமையான நடிகை.. இதில் பெரிதாக ஸ்கோப் இல்லை. எத வேணாலும் காட்டுறேன் என காம நெடி டயலாக்குகளை பிரியாவுக்கே வைத்துவிட்டனர்.
ரவிமரியா மற்றும் அறந்தாங்கி நிஷா காட்சிகளில் சிலவற்றில் ரசிக்கலாம். ஆனால் ரவிமரியாவின் அடியாளின் அந்த குசு மேட்டர் போர். நிறைய படத்தில் இப்படியே காட்டிக் கொண்டிருந்தால் எப்படி பாஸ்.?
நாசரின் பேச்சு மற்றும் காமெடி காட்சிகள் செயற்கையாக உள்ளது. எவ்வளவு பெரிய நடிகர் அவரை வீணடிக்கலாமா? முனீஷ்காந்த் காமெடி ஓகே ரகம். ஆனால் அவருக்கு 1960களில் போலீஸ் போட்டுக் கொண்ட ட்ரவுசரை மாட்டிவிட்டது ஏனோ..? தெரியல..
டெக்னீஷியன்கள்…
சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். ஜாலியாக கொடுக்க வேண்டும் என நினைத்து சொதப்பிவிட்டார். போபோ சசி என்பவர் இசையமைத்துள்ளார்.
காமெடி காட்சிகளுக்கு டிராமாக்களில் மியூசிக் போடுவார்களே அதே போல போட்டு இருக்கிறார். பின்னணி இசையில் நம்மை சோதிக்கிறார்.
பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. போதை பாடல்களாக உள்ளது.
ஆக இந்த ஹாஸ்டல்.. ரசிகர்களுக்கு அவஸ்தை..
Hostel movie review and rating in Tamil