தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியன் 2 விமர்சனம்.; எதுவும் மாறல.. எவனும் திருந்தல
ஸ்டோரி…
சித்தார்த், பிரியா பவானிசங்கர், ஜெகன் மற்றும் ரிஷி ஆகிய நால்வரும் பார்க்கிங் டாக்ஸ் என்ற பெயரில் யூடியூப் நடத்தி வருகின்றனர்.. இதன் மூலம் சமூகத்தில் நடக்கும் குற்றங்களை மக்களுக்கு சொல்கின்றனர்..
இவர்களின் மூலம் குற்றங்கள் அரசுக்கு தெரியவந்து காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.. ஆனாலும் குற்றவாளிகள் ஒரு சில தினங்களில் ஜாமீனில் வெளியே வருகின்றனர்..
இதுபோல குற்றவாளிகளை தண்டிக்க முடியாதா என இவர்கள் ஏங்கி காத்திருக்க வேறு வழியின்றி இந்தியன் தாத்தாவை அழைக்கின்றனர்.. இவர்களின் சமூக வலைத்தள குரல்களைக் கேட்கும் இந்தியன் தாத்தா வருகிறார்.
அதன் பிறகு நடப்பது எல்லாம் படத்தின் மீதிக்கதை.. ஆனாலும் ஒரு நிலையில் கோ பேக் இந்தியன் என கமலுக்கு எதிராக ஊரே திரள்கிறது.. அப்படி என்னதான் நடந்தது? என்பது மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
70 வயதை நெருங்கும் கமல் இன்னும் நாம் வியக்கும் அளவுக்கு ரிஸ்க் எடுத்துக் கொண்டே இருப்பார் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்..
இந்தியன் முதல் பாகத்தில் ஒரே மாதிரியான கெட்டப்பில் படம் முழுவதும் வருவார்.. ஆனால் இந்த மொபைல் உலகத்தில் யாராவது வீடியோ எடுத்து தன்னை அடையாளப்படுத்தி விடுவார்கள் என்பதற்காக பல வித கெட்டப்புகளில் வந்து அசர வைக்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார்…
தடிமனான மேக்கப் ஐ தாண்டியும் அவரது நடிப்பு வெளிப்படுகிறது.. முக்கியமாக உதடு நாக்கு மூலம் கூட உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.. லஞ்ச அதிகாரிகளை களை எடுக்கும் சகலகலா வல்லவனாக கமல்..
சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், பாபி சிம்ஹா பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷி உள்ளிட்டோர் இருந்தாலும் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.
சமுத்திரக்கனி, விவேக், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், ரேணுகா, மனோபாலா, எஸ்.ஜே.சூர்யா, தம்பி ராமையா, காளிதாஸ் ஜெயராம், இமான் அண்ணாச்சி, வினோத் சாகர், மாரிமுத்து ஆகியோரும் உண்டு என சொல்லிக் கொள்ளலாம்..
வில்லன்களில் குல்ஷன் குரோவரும், ஜாகிர் ஹுசைனும் மிரட்டல்.. இந்தியன் 3 படத்தில் தான் காஜல் அகர்வால் காட்சிகள் இருக்கும்.. எஸ் ஜே சூர்யா காட்சிகள் வலு வில்லை.. அதுபோல பாபி சிக்ஹாவும் படத்தில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..
டெக்னீசியன்ஸ்…
ஷங்கர் படங்கள் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது.. இந்தியன் 2 படத்தில் அது அதிகம்.. முக்கியமாக இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளுக்கும் சென்று படமாக்கி இருக்கிறார்..
காலண்டர் பாடலில் ஒளிப்பதிவின் அழகியலும் அழகிகளின் ஆட்டமும் வானத்தில் ஆடுவது போன்ற செட்டப்பும் பிரம்மாண்டத்தின் உச்சம்..
இசையைப் பொருத்தவரை இந்தியன் முதல் பாக அளவிற்கு இல்லை என்றாலும் இன்றைய நவீன ட்ரெண்டுக்கு ஏற்ப துள்ளலான இசையை கொடுத்திருக்கிறார் அனிருத்.. கம் பேக் இந்தியன் என்ற பாடலும் தாத்தா வராரு கதற விட போறாரு என்ற பாடலும் ஆட்டம் போட வைக்கிறது.. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் கேமரா கண்களில் காட்சிகள் அழகோ அழகு..
ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவு, அனல் அரசு, பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா உள்ளிட்ட பல பைட் மாஸ்டர்கள் செய்திருக்கின்றனர்.. ஒவ்வொன்றும் அனல் தெறிக்கும் ரகம்..
ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்திருக்கிறார்.. மூன்று மணி நேர படத்தை கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் இன்னும் விறுவிறுப்பும் சுவாரசியமும் கூடியிருக்கும்..
முத்துராஜ் கலைவண்ணம் படத்தின் பிரம்மாண்டத்திற்கு ஹைலைட்.. வில்லன் ஜாகிர் ஹுசைனின் தங்க மாளிகை கலை வண்ணத்தில் ஜொலிக்கிறது..
வசனகர்த்தா சுஜாதா தற்போது இல்லை.. அந்த கூட்டணியை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என்பது வசனங்களில் தெரிகிறது.
ஷங்கரின் பிரம்மாண்டத்திற்கு நாங்கள் இருக்கிறோம் என்பது போல லைக்கா கை கொடுத்திருக்கிறது.. ஃபாரின் சீன்கள் முதல் பல சீன்களை வியந்து பார்க்க வைக்கிறது..
ஊழல் என்பது அரசு அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளும் மட்டுமில்லை.. அவர்களும் மக்களே.. நம் குடும்பத்திலும் இருக்கிறது… நம் வீட்டில் இருக்கும் லஞ்சப் பேர்வழிகளை களை எடுத்தால் மட்டுமே வீடும் நலம் பெறும் நாடும் வளம் பெறும் என்பதை உணர்த்தும் விதமாக திரைக்கதை அமைத்த ஷங்கரை வெகுவாக பாராட்டலாம்..
நாட்டில் யாரோ ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்காக கம்பேக் இந்தியன் என்று அழைக்கும் சித்தார்த் தன் அம்மா தற்கொலை செய்து கொண்டார் என்பதற்காக கோ பேக் இந்தியன் என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயம் அல்ல.. அவர் சொன்னால் அனைவரும் செய்வார்களா? பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியன் தாத்தா பலம் புரியாதா? என்ற கேள்விகள் எழுகிறது..
கமல் என்ற மிகப்பெரிய நட்சத்திர படத்தில் ரஜினி டயலாக் காட்சிகளை வைத்திருப்பது வேற லெவல்.. அதுபோல ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் கமலைப் புகழ்ந்து ரஜினி பேசியிருப்பார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்..
ஆக இந்தியன் 2.. Come Back Indian
Indian2 movie review