தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர்கள் : கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக், சரத் லோகிஸ்தவா, ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர்.
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்
படத்தொகுப்பு : விஜே சாபு ஜோசப்.
இயக்கம் : கோகுல்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பாளர் : ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் – பிரபு மற்றும் பிரகாஷ்பாபு
கதைக்களம்…
காஷ்மோரா மற்றும் ராஜ்நாயக் என இரண்டு வேடம் ஏற்றுள்ளார் கார்த்தி.
பில்லி சூன்யம் மற்றும் பேய்களை ஓட்டுபவர் என ஊரையே ஏமாற்றுபவர் காஷ்மோரா கார்த்தி. இவரது அப்பா விவேக், தங்கை மதுமிதா என ஒட்டு மொத்த குடும்பத்திற்கே இதான் வேலை.
மினிஸ்டர் வீட்டிலும் இவரது ஏமாற்று வேலையை காண்பித்து நம்ப வைத்துவிடுகிறார்.
ஒரு சூழ்நிலையில் ஐடி ரெய்டில் இருந்து தப்பிப்பதற்காக கார்த்தி வீட்டில் பணத்தை வைக்கிறார் மினிஸ்டர்.
அத்துடன் எஸ்கேப் ஆகிறார் விவேக்.
இதனிடையில் மிகமிக பழமையான பங்களாவுக்கு பேய் ஓட்ட செல்கிறார் கார்த்தி.
அங்கு நிஜமான பேய்களுடன் கார்த்தி மாட்டிக் கொள்ள, கூடவே ஸ்ரீதிவ்யா மற்றும் விவேக் குடும்பத்தினரை அங்கே வரவழைக்கிறது வில்லன் பேய்.
இவர்களை அங்கே வரவழைக்க என்ன காரணம்? அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா? என விடை சொல்கிறார் இந்த காஷ்மோரா.
கதாபாத்திரங்கள்…
காஷ்மோரா, ராஜ்நாயக் என இரண்டிலும் கார்த்தி செஞ்சுரி அடிக்கிறார்.
ஒட்டுமொத்த படத்தையும் இரு கேரக்டரில் தாங்கி நிற்கிறார்.
பேய் பங்களாவில் மாட்டிக் கொண்டபின், அட.. உங்க வித்தையெல்லாம் என்கிட்ட ஏன் காட்டுறீங்க. கஸ்ட்மர் கிட்ட காட்டுங்க என்று கூறி கெத்து காட்டும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
மொட்டைத் தலையுடனும் தலை இல்லாமல் முண்டமாக வந்து மிரட்டுவதும் குழந்தைகளுக்கு பிடிக்கும்.
நயன்தாரா எப்போ வருவார் என ஏங்க வைக்கிறார். வந்தபின்னர் ஏங்க வைத்து செல்கிறார்.
ஸ்ரீ திவ்யாவுக்கு மாடர்ன் டைப் கேரக்டர். ஆனால் காட்சிகள் வலுவில்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு விவேக். வெல்கம் பேக். காமெடி ரசிக்க வைக்கிறது.
இவர்களுடன் சரத் லோகிஸ்தவா, ஜாங்கிரி மதுமிதா ஆகியோரும் உண்டு.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஓயா ஓயா பாடல் மெல்லிசையில் சரித்திரக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறார் சந்தோஷ் நாராயணன்.
பின்னணி இசை சில இடங்களில் பேச வைக்கிறது.
கலை இயக்குனருக்கு நிறைய நேரம் கை குலுக்கலாம்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் இரண்டு விதமான காட்சி அமைப்புகளும் அருமை.
படத்தின் பிளஸ் :
- கார்த்தி மற்றும் நயன்தாராவின் நடிப்பு
- சாமியார்களின் பித்தலாட்டம்
- விவேக் காமெடி மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள்
- ராஜ்நாயக் மற்றும் ரத்னமஹாதேவி காட்சிகள்
படத்தின் மைனஸ் :
- பெரும்பாலான படங்களில் படத்தின் நீளம் பெரும் குறையாக இருக்கிறது. இதிலும் அதேதான்.
- மொட்டைத் தலையுடன் இறக்கும் ராஜ்நாயக் பழிவாங்க வரும்போது கொஞ்சம் முடியுடன் வருவது எப்படி? பாஸ் (ஓ. இதான் 3வது கெட்டப்?)