தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒன்லைன்..
ஒரு ஆண் ஒரே சமயத்தில் இரண்டு பெண்களிடம் காதல் கொண்டு இருவரையும் திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அந்த 2 காதலிகள் ஒத்துக் கொண்டார்களா?
கதைக்களம்..
தன் பிறப்பு முதலே துரதிஷ்டசாலியாக இருக்கிறார் நாயகன் ராம்போ (விஜய்சேதுபதி). தன் தந்தையை சின்ன வயதிலேயே இழக்கிறார். இவரின் வாழ்க்கையில் எல்லாமே நேருக்கு மாறாக நடக்கிறது.
விஜய் சேதுபதி பிறந்தவுடனே அப்பா இறந்து விடுகிறார், அம்மா படுத்த படுக்கையாகி விடுகிறார். மழை பெய்யும் போது இவர் வெளியே போனால் அந்த மழை கூட நின்றுவிடும். அப்படியொரு துரதிர்ஷ்டசாலியாம் இவர்.
பகலில் கார் டிரைவராகவும் இரவில் பவுன்சராகவும் வேலை பார்த்து வருகிறார்.
டிரைவராக வேலை செய்யும்போது நயன்தாராவையும் (கண்மணி), பவுன்சர் வேலை செய்யும்போது சமந்தாவையும் (கதீஜா) காதலிக்கிறார்.
ஸ்ரீசாந்துடன் காதல் பிரேக் அப் ஆக அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் சமந்தாவுக்கு காதல் மலர்கிறது.
மீண்டும் ஓடிடி தளத்தை குறி வைக்கும் விஜய்சேதுபதி & நயன்தாரா
ஒரு கட்டத்தில் இரு பெண்களின் காதல் பிரச்சனையாக மாறுகிறது.
இறுதியில் காதல் பிரச்சனையை எப்படி சமாளித்தார்? நயன்தாரா, சமந்தா இருவரில் யாரை திருமணம் செய்தார்? காதல் கை கூடியதா? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்..
சின்ன சின்ன முக பாவனைகளிலும் இரண்டு பெண்களிடம் சிக்கும் காட்சிகளில் அதிக ஸ்கோர் செய்துள்ளார் விஜய்சேதுபதி.
சில காட்சிகள் வீரா பட ரஜினி மீனா ரோஜாவை நினைவுப்படுத்துகிறது.
நயன்தாரா இந்த படத்தில் எலும்பும் தோலுமாக இருப்பதுதான் கஷ்டமாக உள்ளது. விக்னேஷ் சிவன் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
நடுத்தர குடும்ப பெண்ணாக கஷ்டப்படும் கண்மணியாக நயன்தாரா. ஆனால் சமந்தாவிடம் உள்ள ஈர்ப்பு இதில் நயன்தாராவிடம் இல்லை. என்னாச்சுன்னு தெரியலையே…
மாடர்ன் டிரஸ்ஸில் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார் கதீஜா.
விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா காம்பினேஷன் சீன்களில் ரொமான்டிக் காமெடி களைக் கட்டும்.
மாறன், கிங்ஸ்லி ஆகியோரும் உண்டு. சில இடங்களில் இவர்களின் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
டெக்னீஷியன்கள்..
ஒளிப்பதிவு படத்திற்கு உயிரூட்டியுள்ளது. படத்தை கலர்புல்லாக கொடுத்துள்ளார் கதிர்.
அனிருத் இசையமைத்துள்ளார். பாடல்கள் பட்டைய கிளப்பியுள்ளன. இளைஞரகளுக்கும் காதலர்களுக்கும் ஏற்ற வகையில் துள்ளல்லான இசையை கொடுத்துள்ளார். பின்னணி இசையும் ரசிக்க தக்க வகையில் உள்ளது.
ஆண்கள் விடுதியில் ஓர் அழகி… ஹாஸ்டல் விமர்சனம்
இரண்டு காதலை மையமாக வைத்து ஒரு படத்தை எடுப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதை காமெடியாக சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ஆனால் லாஜிக் பார்த்தால் இதை முழுமையாக ரசிக்க முடியாது. எனவே ஜஸ்ட் ரொமான்டிக் என்று நினைத்து பார்த்தால் ரசிக்கலாம்.
குஷி, சத்யா படங்களில் வரும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். கொஞ்சம் புதுமையாக யோசித்திருக்கலாம்.
ஒரு ஆண் மகனுக்காக 2 அழகிகள் அடித்துக் கொள்வது ஆடியன்சை வெறுப்பேற்றுகிறது. ஆனால் அதுபோல சில நிகழ்வுகளை நாம் நம் தாத்தா காலத்திலும் சமீபத்தில் வட இந்தியாவிலும் பார்த்து இருக்கிறோம் என்பதால் அட்ஜ்ஸ்ட் செய்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து உள்ளார்.
ஆக.. ரொமான்டிக் லவ்வர்ஸ்… காத்துவாக்குல ரெண்டு காதல்…
Kaathuvaakula Rendu Kaadhal movie review and rating in Tamil