தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
ஒரு பிரபல யூடியூப் சேனல் குழுவை நாயாடி இனத்தை பற்றிய ஆராய சொல்லி ஒருவர் அனுப்புகிறார். அதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து அவரும் அவர்களுடன் பயணிக்கிறார்.
ஒரு திரில்லருக்காகவும் பணத்திற்காகவும் ஆசைப்படும் அந்த குழுவினர் ஒரு பங்களாவில் சென்றடைந்து அங்கு அமானுஷ்ய சக்திகளிடம் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தைகளே இந்த படத்தின் கதை.
வனப்பகுதி பழங்குடி இனத்தவர் நாயாடிகள். இவர்கள் உயர் சமூகத்தினராலும், விலங்குகளாலும் தொல்லைக்கு உள்ளாகின்றனர்.
எனவே தங்களை காக்க பில்லி சூனியம், மந்திர தந்திரங்களை கற்று சக்தி பெறுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் நாயடி பெண் மீது காதல் கொள்ளும் ஒரு அரசர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் எங்கள் இடத்தில் தான் நீங்கள் வசிக்க வேண்டும் என பெண் நிபந்தனை விதிக்கிறார்.
அதனை ஏற்றுக்கொண்டு அங்கு வாழும் அவர்கள் சில நரபலிகளை கொடுக்கின்றனர். மன்னர் செய்த காரியம் பிடிக்காமல் மக்கள் அவர்களை கொல்ல திட்டமிடுகின்றனர்.
அதன் பின்னர் என்ன ஆனது.? என்பதுதான் நாயாடி படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
நாயகன் ஆதர்ஷ், நாயகி காதம்பரி ஆகியோர் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.
பபின், நிவாஸ், அரவிந்தசாமி, ரவிச்சந்திரன், கீதா லட்சுமி ஆகியோரும் படத்தில் உண்டு்.
டெக்னீஷியன்கள்…
அருணின் பின்னணி இசை சோதனை.. பேய் படம் என்றால் பேய் இசை கொடுக்க வேண்டும் என நினைத்தாரோ.? காதை கிழித்து விட்டார்.. ஒரு இசையும் உருப்படியாக இல்லை..
மோசஸ் டேனியலின் கேமரா ஓரளவு விளையாடியுள்ளது.
இயக்குனர் ஆதர்ஷ் மதிகாந்தம்… ஒரு பேய் படத்தை கொடுக்க வேண்டும் என வழக்கமான கதையை இவர் தொட்டிருந்தாலும் நாயாடி என்ற கேரள பழங்குடியின மக்களை மையப்படுத்தி இருக்கிறார்.
இதில் ஆரம்பத்தில் காட்டப்படும் ஸ்டோரி போட் அனிமேஷன் காட்சிகள் சிறப்பாக உள்ளன. இறுதிவரை அப்படியே கொடுத்திருக்கலாம் போல.
படம் ஆரம்பிக்கும் போது ஏற்படும் தலைவலி படம் முடியும் வரை நீடிக்கிறது.
ஆக நாயாடி.. வாயாடியை கூட சமாளிச்சிடலாம்.!?!
Naayaadi movie review and rating in tamil