தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அந்தகன் விமர்சனம் 4.25/5.. டாப் கியரில் டாப் ஸ்டார் பிரஷாந்த்
அந்தகன் – பிரசாந்தின் 50 வது படமாகும்..
ஸ்டோரி…
பிரசாந்த் ஒரு பியானோ கலைஞர்.. இவர் கண் பார்வை தெரியாதவராக நடிக்கிறார்.. அதற்கு காரணம்.. பியானோ வாசிக்கும் போது பார்வை தெரியாதவராய் இருந்தால் தன்னால் இசையில் முழு கவனம் செலுத்த முடியும் என நம்புகிறார்.. மேலும் கண்பார்வையற்ற இருப்பதால் கூடுதல் லாபமும் அனுதாபமும் கிடைப்பதால் இந்த ஒரு நிலையை அவர் மேற்கொண்டு நடித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் நவரச நாயகன் நடிகர் கார்த்திக் தன் திருமண நாளில் மனைவி சிம்ரனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க இவரை தன் வீட்டிற்கு பியானோ வாசிக்க அழைக்கிறார்.
அதன்படி பிரசாந்தை வீட்டிற்கு உள்ளே அழைத்து செல்கிறார் கார்த்திக்கின் மனைவி சிம்ரன்.. அங்கே கார்த்திக் இறந்து கிடப்பதை பார்த்து விடுகிறார். அந்த சமயத்தில் வீட்டில் உள்ளே போலீஸ் சமுத்திரக்கனி இருப்பதை பார்த்து விடுகிறார்.
அதன் பிறகு பிரசாந்த் என்ன செய்தார்? தனக்கு கண் தெரியும் என்பதை ஒப்புக்கொண்டாரா? அல்லது பார்வையற்றவராக நடித்தாரா? என்பது தான் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கே எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, சமுத்திரக்கனி, வனிதா, யோகிபாபு, மனோபாலா, ஆதேஷ் பாலா, பெசன்ட் ரவி, பூவையார் மற்றும் பலர்..
1990களில் கலக்கிய பிரஷாந்த் சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.. தற்போது இந்தப் படத்தின் மூலம் அவருக்கு ஒரு மிகப்பெரிய ரீ என்ட்ரீ கிடைத்துள்ளது.. பார்வை தெரியாதவராக இருக்கும்போது பார்வை தெரிந்தவராக இருக்கும்போது என இரண்டு மாறு பட்டு நடிப்பை கொடுத்திருக்கிறார் பிரசாந்த்..
ஒரு கட்டத்தில் நிஜமாகவே பார்வை பறிபோன பின் அவரின் நடிப்பு அவருக்கு பல விருதுகளை கொடுக்கும்.. இவருக்கும் பிரியா ஆனந்துக்கும் இருக்கும் நெருக்கம் மீண்டும் பிரஷாந்த்தை ரொமான்டிக் ஹீரோவாக காட்டி இருக்கிறது..
பிரஷாந்த் நிஜமான பியானோ என்பதால் நடிகர் கார்த்திக்கின் பாடல்களை வாசிப்பது சூப்பர்.. அது போல அமரன் பட பாடலை பாடியிருப்பதும் செம..
பார்த்தேன் ரசித்தேன் என்ற படத்தில் வில்லி வேடத்தில் கலக்கி இருப்பார் சிமரன்.. இன்னும் அந்த எனர்ஜி குறையாமல் கலக்கி இருக்கிறார் சிம்ஸ்..
யோகிபாபு & ஊர்வசி & KS ரவிக்குமார் கூட்டணி படத்திற்கு பலம்.. இவர்களது கேரக்டர் சிரிக்கவும் சிந்திக்க வைக்கிறது..
பிரியா ஆனந்தின் ஆடைகளுக்காகவே அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. கவர்ச்சியிலும் நடிப்பிலும் ஜொலிக்கிறார்..
சமுத்திரக்கனி, வனிதா.. இவர்களது கணவன் மனைவி கேரக்டர்ஸ் சீரியஸ்க்கு கியாரண்ட்டி.. என்னதான் போலீஸ் ஆக இருந்தாலும் தப்பு செஞ்சிட்டா பொண்டாட்டிக்கு பயப்படணும்.. என்பதை தன் கண்களில் காட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி.. அவர் வனிதாவை *லல்லுமா….* என சொல்லுவது செம..
மனோபாலா, ஆதேஷ் பாலா, பெசன்ட் ரவி, பூவையார் ஆகியோரின் கேரக்டர் கதை ஓட்டத்திற்கு பெரிய அளவில் உதவியிருக்கிறது.. ஆதேஷ் பாலா அசத்தல்.
டெக்னீசியன்ஸ்…
தயாரிப்பு: சாந்தி தியாகராஜன், ப்ரீத்தி தியாகராஜன்..
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: ரவி யாதவ்
இயக்கம்: தியாகராஜன்
பி ஆர் ஓ: நிகில் முருகன்
அனிருத் பாடிய *அந்தகன் ஆன்த்தம்…* படம் (என்ட் கார்ட்) முடிந்து வந்தாலும் ஆட்டம் போட வைக்கிறது.. அதில் பிரஷாந்த் ஹேர் ஸ்டைல் & சிம்ரன் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு வேற லெவல் ஹாப்பினஸ்..
இசை: சந்தோஷ் நாராயணன்v& ஒளிப்பதிவு: ரவி யாதவ்… இருவரும் கூடுதல் கவனம் எடுத்து சீன்களை சிறப்பித்துள்ளனர்..
இயக்கம்: தியாகராஜன்… ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அந்தாநூன் என்ற படத்தின் ரீமேக்.. இதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கூடுதல் கவனம் எடுத்து இருக்கிறார் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன்.. அதற்கு ஏற்ப கேரக்டர்களுக்கு நடிகர்களை தேர்ந்தெடுத்து வேலை வாங்கி கைத்தட்டல் வாங்க வைத்து விட்டார்.. மனோபாலா பேசும் சின்ன சின்ன டயலாக் கூட ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது..
இண்டெர்வெல்க்கு பிறகு நிறைய நிறைய ட்விஸ்ட் வைத்து க்ளைமாக்ஸ் வரை சீட் நுனியில் உட்கார வைத்துவிட்டார் டைரக்டர் தியாகராஜன்..
ஆக தன் மகன் பிரஷாந்துக்கு ஒரு கம் பேக் கொடுத்து இருக்கிறார் தியாகராஜன்..
இனி சினிமா பயணத்தில் டாப் கியரில் டாப் ஸ்டார் பிரஷாந்த் செல்வார் என எதிர்பார்க்கலாம்..
Prashanths Andhagan movie review