தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர்கள்: ஹரிஷ் கல்யாண் (ஸ்ரீகுமார்), ரைசா (சிந்துஜா), ஆனந்த்பாபு (விவேக்), ரேகா (சுதா), ராஜா ராணி பாண்டியன் (கோபி), பஞ்சுசுப்பு, முனீஸ்காந்த் (தங்கராஜ்), தீப்ஸ் (சதீஷ்) மற்றும் பலர்.
இயக்கம் – இளன்
ஒளிப்பதிவு – ராஜா பட்டாச்சார்யா
எடிட்டிங் – மணிக்குமரன் சங்கரா
இசை – யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு : கே புரொடக்ஷ்ன்ஸ் S.N.ராஜராஜன், யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ் (பி) லிட்
பிஆர்ஓ : மௌனம் ரவி
கதைக்களம்…
ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார் ஹரிஷ் கல்யாண். இவர் வீட்டிற்கு பயந்து வளர்ந்த பையன். தண்ணி, தம்பி என எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்.
இவரது கம்பெனிக்கு அடுத்த வேலையில் பார்க்கும் ரைசாவை இவர் ஒரு தலையாக காதலிக்கிறார். சில நாட்களில் அவரும் ஹரிஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்க்கிறார்.
பின்னர் இருவரும் நெருக்கமாகி விடுகிறார்கள். ஒரு முறை அந்த நெருக்கம் செக்ஸ் வரை செல்கிறது.
உடனே தன் காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்துக் கொள்ளலாம் என கேட்கிறார். அதற்கு மறுக்கிறார் ரைசா.
செக்ஸ் ஓகே. லிவிங் டுகெதர் கூட ஓகே. ஆனால் காதல், திருமணம் எல்லாம் எனக்கு செட்டாகாது என சொல்லி விடுகிறார் ரைசா.
அதன்பின்னர் ஹரிஷ் என்ன செய்தார்? தன் காதலியை கரம் பிடித்தாரா? இல்ல கழட்டி விடப்பட்டாரா? ரைசா திருமணத்திற்கு மறுக்க என்ன காரணம்? என்பதே மீதிக் கதை.
கேரக்டர்கள்…
அப்பாவி, அழகன் என அசத்தலாக வருகிறார் ஹரிஷ் கல்யாண். ரொமான்ஸ், கெஞ்சல் அதே சமயம் பொறுப்பான பிள்ளை என இன்றைய நவீன காதலனை போல் அசால்லடாக செய்துள்ளார். படத்தில் இவருக்கு ஆக்சன் மட்டும்தான் மிஸ்ஸிங்.
ரைசா.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் எப்படியோ ? ஆனால் இந்த காதல் படத்தில் பின்னி எடுத்துவிட்டார்.
திருமணம் குழந்தை வேண்டாம் என இவர் மறுப்பதற்கு சொல்லும் காரணங்கள் கொஞ்சம் ஓவரா இருந்தாலும் இன்றைய பெண்கள் தங்கள் கனவுகளை தொலைத்து நிற்கும் அவலம் தெரிகிறது.
ரைசாவின் கேரக்டர் தங்கள் லட்சியங்களை கலைத்துவிட்டு குடும்பத்திற்காக வாழும் பெண்களை நினைக்க தோன்றுகிறது. அது நம் சகோதரிகளாக அம்மாவாக கூட இருக்கலாம்.
தன் இளமை துடிப்பான நடிப்பால் நம் மனதை நைசா திருடிவிடுகிறார் ரைசா.
இவர்களுடன் சதீஷ் கேரக்டரில் வரும் தீப்ஸ், சுப்பு பஞ்சு, முனீஷ்காந்த், ரேகா, ராஜா ராணி படப்புகழ் பாண்டியன் ஆகியோரின் நடிப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ராஜா பட்டச்சார்யாவின் ஒளிப்பதிவில் இந்த காதல் செம கலர்புல்லாய் மாறிவிட்டது. எடிட்டரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
யுவன் இசையில் 12 பாடல்கள். நல்லவேளை பாதி பாடல்கள் படத்தின் காட்சி ஓட்டத்தோடு நகர்த்தியுள்ளார். எனவே காட்சியுடன் நம்மையும் ஒன்ற வைக்கிறது. ஓரிரு பாடல்களை ரீப்பிட் மோடில் கேட்கலாம்.
பின்னணி இசையில் வழக்கம்போல கவர்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஆனந்த்பாபுவை ரைசாவின் அப்பாவாக கொண்டு வந்துள்ளார். அவர் ரொம்ப ப்ராடிக்கலாக இருக்கிறாராம். தன் மகள் ஒருவனுடன் படுத்துவிட்டேன் என்கிறார்.
லிவிங் டுகெதர் வாழ வேண்டும் என ஒரு மகள் அப்பாவிடம் எப்படி சொல்வாள்? அதை எப்படி ஈஸியாக எடுத்து கொள்ள முடியும். அப்பாக்களே.. இது ஐயோ அப்ப்ப்பா…
படத்தில் ட்விஸ்ட் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். க்ளைமாக்ஸில் திருமணத்தை வெறுப்பவராகவும் ஹரிஸையும் மேரேஜ் லைப் வேனும் என ரைசாவை மாற்றியிருப்பது ரசிக்க வைக்கிறது. ஆனால் ஜஸ்ட் லைக் தட் என சொல்லிவிட்டதுதான் ஒரு குறை.
இளன் இயக்கத்தில் நவீன காதலர்களுக்கான செம ஸ்பெஷல் படம் இது எனலாம்.
பியார் பிரேமா காதல்.. லவ் இல்லாத லைஃப் வேஸ்ட் சாரே