தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர்கள் : ஜெய், யாமி கௌதம், சந்தானம், விடிவி கணேஷ், பிரேம்குமார், நாசர், தம்பிராமையா, அஜீதோஷ் ராணா மற்றும் பலர்.
இசை : கார்த்திக்
ஒளிப்பதிவு : சத்யா பொன்மர்
படத்தொகுப்பு : பிரவீன் ஆண்டனி
இயக்கம் : பிரேம்சாய்
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : கௌதம்மேனன்
கதைக்களம்…
தனியார் அஞ்சல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார் தமிழ்செல்வன் (ஜெய்).
ஒரு சூழ்நிலையில் மருத்துவதுறையில் நடக்கும் மோசடியின் முக்கியமான ஆதாரம் ஒன்று முக்கியமான நபருக்கு அஞ்சலில் செல்கிறது.
அதனை தடுக்க நினைக்கும் வில்லன் கோஷ்டியினருக்கும் நாயகனுக்கும் நடக்கும் போராட்டமே இப்படத்தின் விறுவிறுப்பான கதை.
கதாபாத்திரங்கள்…
வழக்கம் போல தனக்கே உரித்தான துள்ளல் மற்றும் உற்சாகத்துடன் நடித்துள்ளார் ஜெய்.
காதலிக்காக அஞ்சல் கொண்டு போவதும், அலைவதும் என சின்ன சின்ன விஷயங்கள் மூலம் ரசிக்க வைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.
ஆனால் அவரது அழகான ஹேர் ஸ்டைல் இதில் மிஸ்ஸிங். இப்போதெல்லாம் எவரும் தலை சீவுவதே கிடையாது என்பதாலோ?
நாயகி யாமி கௌதமுக்கு பெரிதாக வேலையில்லை என்றாலும் கண்களால் கவர்கிறார். அழகான உடைகள் உடுத்தி அம்சமாக வந்து செல்கிறார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு காமெடியனாக சந்தானம். முதல் பாதியில் படம் ஆமை வேகத்தில் நகரும் போது இவரே ஆறுதல் தருகிறார்.
இவருடன் விடிவி கணேசும் சேர்ந்து கலகலப்பூட்டியிருக்கிறார்கள்.
நாசர் மற்றும் தம்பி ராமையா ஆகியோருக்கான காட்சிகள் மிகவும் குறைவே. இருந்தபோதிலும் நிறைவான நடிப்பை தந்துள்ளனர்.
வில்லன் அஜீதோஷ் ராணா, டாக்டர் பிரேம்குமார் இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பாடகர் கார்த்திக்கின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையமைத்துள்ள சந்தீப் மற்றும் அக்சத் நம்மை கவர்கின்றனர்.
க்ளைமாக்சில் அஞ்சல் மாறும்போது வரும் பின்னணி இசை கூடுதல் பலம் சேர்க்கிறது.
சத்யா பொன்மரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து.
படத்தின் ப்ளஸ்…
- விழிப்புணர்வுடன் உள்ள திரைக்கதையும் அதன் விறுவிறுப்பும்
- சரியாக 113 நிமிடங்களில் அழகான படத்தை கொடுத்திருக்கிறார்
- நாம் கற்றது எந்த தொழிலாக இருந்தாலும் ஒரு வகையில் கை கொடுக்கும் என உணர்த்திய க்ளைமாக்ஸ் அருமை
படத்தின் மைனஸ்…
- முதல் பாதியில் சில காட்சிகளை வெட்டி இருக்கலாம்
- பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் முதல் பாதியை ரசிக்க வைத்திருக்கலாம்
- தன் முதல் படத்திலேயே அருமையான ஸ்கிரிப்டை எடுத்து அதை ரசிக்கும்படி கொடுத்திக்கிறார் இயக்குனர் பிரேம்சாய்
பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராக இருந்தாலும் அவரது சாயலே இல்லாமல் படம் செய்திருக்கிறார்.
ஒரு சில இடங்களில் நடக்கும் மருத்துவதுறையின் மோசடிகளை அம்பலப்படுத்தியதற்கு இயக்குனருக்கு அப்ளாஸ் கொடுக்கலாம்.
தன்னுடைய படத்தலைப்புகளை போன்றே அழகான தமிழ் பெயரை வைத்த தயாரிப்பாளர் கௌதம் மேனனை பாராட்டலாம்.
மொத்தத்தில் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்… அழகான அஞ்சல்