தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தி அக்காலி விமர்சனம்.; என்னதான் சொல்றீங்க.??
ஸ்டோரி…
சில ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பற்றி விசாரணை நடத்துகிறார் போலீஸ் ஜெயக்குமார். அதை தற்போது நடப்பு ஆண்டில் ஜெயக்குமாரிடம் பழைய கதையை கேட்டு அறிகிறார் மற்றொரு போலீஸ் அதிகாரி.
பாழடைந்த கல்லறையில் போதைப் பொருள்கள் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அறிகிறார்.. அது பற்றிய விசாரணையில் ஜெயக்குமார் இறங்கிய போது தான் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் அவருக்கு தெரிய வருகிறது.
அதாவது சாத்தான்களை வழிபடும் சில நபர்கள் அங்கு நரபலி கொடுத்து பல பூஜைகளை செய்திருப்பதை அறிகிறார்.
சாத்தான்களுக்காக நரபலி கொடுத்து அந்த கும்பல் யார்? நோக்கம் என்ன.? அவர்களை கண்டுபிடித்தாரா? என்பதுதான் மீதிக்கதை.
(இப்படி ஈசியாக இந்த கதையை நாம் சொல்லி இருந்தாலும் படத்தில் எதுவுமே புரியாத மனநிலையிலே வந்தோம். பிறகு இயக்குனரிடம் கதை கேட்டு தெரிந்து கொண்டோம் என்பது குறிப்பிடத்தக்கது)
கேரக்டர்ஸ்…
காவல்துறை அதிகாரியாக ஜெய்குமார், கிறிஸ்துவ மத போதகராக நாசர், காவல்துறை உயர் அதிகாரியாக தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் தங்கள் அனுபவ நடிப்பில் ஜொலிக்கின்றனர்.
அதிலும் ஜெயக்குமார் கதைநாயகனாக படம் முழுவதும் ஆளுமை இருக்கிறது. அவரது குரலில் தான் படத்தின் கதை ஓட்டம் நகர்கிறது. ஜெயிச்சிட்ட ஜெயக்குமாரா..
ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் உள்ளிட்ட நடிகர்களும் கதை ஓட்டத்துடன் பயணிக்கின்றனர்.
பேய் பிடித்த தாரணி, பிளாக் மேஜிக் யாமினி, சாத்தான் பாதிக்கப்பட்ட அர்ஜய், பிளாக் வேர்ல்ட் வினோத் கிஷன் ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு பலம்.
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் கிரி முர்பி.. நாம் மற்ற படங்களில் பார்த்து சலிக்காத லொகேஷனை தேர்ந்தெடுப்பது பாராட்டுக்குரியது.
ஆனால் அதே சமயம் ஒரு கதை என்பது ஒரு ரசிகனோடு கனெக்ட் ஆக வேண்டும்.. இந்த படம் எந்த விதத்திலும் கனெக்ட் ஆகவில்லை என்பது வருத்தமே.. முக்கியமாக படத்தின் ஆரம்ப முதல் இறுதி வரை இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்று குழப்ப நிலையே நீடிக்கிறது.
காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா பணிகளில் பெரிய மெனக்கடல் தெரிகிறது.. சாத்தான்களுக்கு அவர் கொடுத்த வடிவமும் காஸ்டீமும் வித்தியாசமான கற்பனை.
கலை இயக்குனர் தோட்டா தரணியின் கலை வண்ணம் படம் முழுவதும் பிரம்மாண்டம்.. சாத்தான்கள் வாழும் இடம் அது பற்றிய குகை கல்லறை உள்ளிட்டு அனைத்தும் பிரம்மாண்டம்..
படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன்.. இவருக்கு மட்டும் கதை புரிந்தால் போதும் என நினைத்து விட்டாரோ? நமக்கு புரியாத படியே எடிட்டிங் செய்து விட்டார்..
தி அக்காலி இந்த படத்தின் தலைப்பே யாருக்கும் புரியவில்லை.. அப்படி இருக்கையில் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் முகமது ஆசிப் ஹமீத். நரபலி என்ற கதைக்களத்தை எடுத்து அத்துடன் சாத்தான் மனிதர்கள் வாழும் இடம் என தனக்குத் தெரிந்த அனைத்தையும் இதில் திணித்து காட்சிகளை சொல்ல முற்பட்டு இருக்கிறார்..
The Akkaali movie review