தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒன்லைன்..
தன் தாயின் மரணத்திற்கு தன் தந்தையே காரணமானதால் அவரை பழிவாங்க மல்லுக்கட்டும் மகன் விருமன்.
கதைக்களம்…
ஊர் தாசில்தார் பிரகாஷ் ராஜ். இவருக்கு நான்கு மகன்கள். இதில் கடைசி மகன் கார்த்தி.. அப்பாவை வெறுக்கும் கார்த்தி தன் தாய் மாமன் ராஜ்கிரண் உடன் வசிக்கிறார்.
பணத்தாசை பிடித்த தாசில்தார் தன் குடும்பத்தையும் ஊரையும் அடிமையாக வைக்க நினைக்கிறார்.
இதனால் குடும்பச் சொத்து உறவில் பிரச்சினை ஏற்படுகிறது. இறுதியில் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
கிராமத்து நையாண்டி, அதிரடி ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார் விருமன் கார்த்தி.
முதல் படம் என்று தெரியாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி. குத்தாட்டம் போட்டும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார். கிராமத்து ரொமான்ஸ் காட்சிகளிலும் சிறப்பு.
அதிகார திமிர் பிடித்த தாசில்தார் கேரக்டரில் பிரகாஷ் ராஜ். கம்பீரம்.
ராஜ்கிரண், சூரி, வடிவுக்கரசி, ஆர்கே சுரேஷ், சரண்யா, இளவரசு, சிங்கம் புலி, மனோஜ், விஎம். சுந்தர், பாண்டியம்மா, அருந்ததி, மைனா, கருணாஸ், வையாபுரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இவர்கள் படத்தின் கதையோட்டத்திற்கு உதவியுள்ளனர்.
ஆணவ அப்பத்தா வடிவுக்கரசி திடீரென மாறி அட்வைஸ் செய்வது ஓவர்.
டெக்னிஷியன்கள்…
யுவன் இசையில் இளையராஜா MP பாடிய பாடல் மனதிற்கு இதம்.. அதுபோல ‘கஞ்சா பூ கண்ணாலே..’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும். அந்தப் பாடலில் கார்த்தி அதிதி கெமிஸ்ட்ரி சூப்பர். பின்னணி இசையிலும் அசத்தல்.
அதிதி பாடிய ‘மதுர வீரன் அழகுல..’ பாடல் சிறப்பு. ஒளிப்பதிவும் ஓகே. கிராமத்து அழகையும் உறவுகளையும் அங்காளி பங்காளிகளையும் அழகாக படம் எடுத்துக் காட்டி இருக்கிறார்.
முத்தையாவின் வழக்கமான கிராமத்து மசாலா.. மண் மணம் மாறாமல் விருமன் விருந்து கொடுத்துள்ளார்.
பெரும்பாலும் முத்தையா படங்களில் வில்லன் வேறொரு நபராக இருப்பார். ஆனால் இதில் மகனுக்கு தந்தையே வில்லனாக இருப்பது சுவாரசியம். அதற்கான காரணத்தையும் கொடுத்துள்ளார். கிளைமாக்சில் திடீரென மனம் மாறுவது.??!!
ஒரு காட்சியில் எம்எல்ஏ மகனான அரசு பதவியில் இருக்கும் ஒருவரை கொல்ல ஒரு கூட்டம் திட்டமிடுகிறது. பதவியில் இருப்பவர்களை கொல்ல பார்கிறாயா.? என கார்த்தி அவர்களை அடிக்கிறார். (எம்எல்ஏ கூட கார்த்தியிடம் லஞ்சம் வாங்குவதாக காட்சியும் உண்டு. அப்போ அவர் நல்லவரா?).
ஆனால் அதற்கு முந்தைய காட்சிகளில் தன் தந்தை தாசில்தாரை அடித்த ஆர்கே சுரேஷ் க்கு மோதிரம் அணிவிக்கிறார்.. அதுதான் புரியவில்லை. இதுபோல சில லாஜிக் குறைகள் இருந்தாலும் ஒரு தந்தை நேர்மையான மனிதராக இல்லாவிட்டால் அந்த குடும்பம் எப்படி சிதைக்கப்படும்.. அந்த குடும்ப உறவுகள் எப்படி பாதிக்கப்படும்.. அடுத்த தலைமுறை எப்படி பயணிக்கும் என்பதை அழகாக காட்டியிருக்கிறார்.
ஒரு குடும்பத் தலைவன் செய்யும் குற்றத்தால் அந்த குடும்பமே தலை குனிந்து நிற்பதையும் தன் பாணியில் காட்டியிருக்கும் முத்தையாவிற்கு முத்தான பாராட்டுக்கள்..
ஆக.. இந்த ‘விருமன்’.. கிராமத்து கிடா விருந்து
Viruman movie review and rating in tamil