தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தமிழ் சினிமாவின் ‘நாளைய தீர்ப்பை’ 25 வருடங்களுக்கு முன்பே எழுதியவர். திரைப்படங்களை நேசிக்கின்ற ‘ரசிகனாய்’ வெள்ளிவிழா கொண்டாடி இன்று ரசிகர்களின் வெற்றிவிழா நாயகனாக உருவெடுத்துள்ளார்.
திரையுலகில் எளிதாக நுழைந்து விட்ட இயக்குனரின் மகன் என்றெல்லாம் இன்றும் இவரை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அதுவல்ல உண்மை. திரையுலகில் நுழையலாம். ஆனால் ஒவ்வொரு ரசிகனின் இதயத்தில் நுழைவது என்பது எளிதான காரியம் அல்ல.
இந்நிலையில் இளையதளபதி விஜய் தனது பிறந்தநாளை ஜூன் 22ஆம் தேதி கொண்டாடுகிறார். இது அவரின் 43வது பிறந்தநாள் ஆகும்.
தங்கள் தளபதியை பற்றி தாங்கள் அறிந்ததும்… அறியாததும்.. இதோ உங்களுக்காக…
- 1996ல் விக்ரமன் இயக்கத்தில் இவர் நடித்த ‘பூவே உனக்காக’ சிட்டி முதல் பட்டி வரை இவரை அடையாளப்படுத்தியது.
- தொடர்ந்து ‘லவ் டுடே’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ உள்ளிட்ட படங்களில் நடித்து ‘காதலுக்கு மரியாதை’ ஏற்படுத்தினார்.
- காதல் நாயகனாக வலம் வந்த இவரை ‘திருமலை’ முழு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது
- தொடர்ந்து ‘கில்லி’, ‘திருப்பாச்சி’ ஆகிய படங்களில் நடித்தார். இதன் பின்னரே காதல், காமெடி, ஆக்ஷன் என மாறி மாறி திரையுலக பந்தைய குதிரையில் சவாரி செய்து வருகிறார்.
- ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் சிவாஜி கணேசன் அவர்களுடனும் ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் விஜயகாந்துடனும் இணைந்து நடித்தார்.
- ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அஜித்தும் மற்றும் ‘நேருக்கு நேர்’, ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஆகிய படங்களில் சூர்யாவும் இவருடன் இணைந்து நடித்தனர்.
- தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய பல படங்களில் சிறுவயது விஜயகாந்தாக இவர்தான் நடித்தார்.
- சென்னை லயோலா கல்லூரியில் பயின்ற விஜய்க்கு படிப்பு ஏறவில்லை.
- இவரது பேராசிரியர் யார் தெரியுமா? ஜெயா டி.வி பிரபலம் அறிவிப்பாளர் ரபிபெர்னார்ட்தான்.
- கல்லூரிக்கு செல்லாமல் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாமலை படத்தை சென்னை உதயம் தியேட்டரில் பலமுறை பார்த்தாராம்.
- சினிமாவில் நடிக்கிற ஆசையை தந்தையையிடம் சொல்ல, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாமலை’ பட வசனத்தைதான் நடித்துக்காட்டினாராம். எனவே, இன்றைக்கும் அந்த வசனத்தை மனப்பாடமாகப் பேசி நடித்துக் காட்டுவார்.
- மற்றவர்களை மகிழ்ச்சியாக நாம் வைத்திருந்தாலே நாம் இளமையாக இருப்போம் என்பவர் விஜய். (சீக்ரெட் ஆஃப் எனர்ஜி).
- சிறிய உடற்பயிற்சிகளை மட்டுமே தினம் மேற்கொண்டு வருகிறார்.
- ஹீரோ ஆவதற்கு முன்பு சண்டை பயிற்சியோ நடனமோ என எதையும் கற்றுக் கொள்ளவில்லை.
- ஆனால் இன்று தென்னிந்திய சினிமாவில் இவரை போல கேஷுவலாகவும் அதிரடியாகவும் நடனமாட எந்த ஹீரோவாலும் முடியாது.
- எந்த ரசிகர் ஆனாலும், யாருடன் போட்டோ எடுத்தாலும் தோளோடு இருக அணைத்துக் கொண்டு போஸ் கொடுப்பார்.
- தன்னை வைத்து படம் இயக்கி பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 5 லட்சம் கொடுத்து உதவிய ஹீரோ இவரே.
- அறிமுக இயக்குனர்கள் மேல் நம்பிக்கை வைத்து அதிகளவில் வாய்ப்பு வழங்கியவர் இவர்.
- பேரரசு, ஜெகன், எழில், செல்வா, பரதன், ரமணா, மாதேஷ், எஸ்.பி.ராஜ்குமார் உள்ளிட்ட கிட்டதட்ட 27 பேருக்கு வாய்ப்பளித்துள்ளார்.
- ‘ப்ரியமுடன்’ படத்தின்போதுதான் இவருக்கு சங்கீதா அறிமுகமானார். முதன்முறையாக சந்தித்தபோது ‘ஹாய்… ஹலோ’ சொன்னதோட சரியாம்.
- ஆனால் பட்டாம்பூச்சி எதுவும் பறக்கவில்லை என்கிறார் இந்த ‘யூத்’ நாயகன்.
- சங்கீதா லண்டனில் வசித்து வந்தார். எனவே அடிக்கடி லண்டன் பறந்து காதலை வளர்த்து இருக்கிறார்.
- தனக்கு பொறுப்பு வரவேண்டும் என்பதற்காகத்தான் தனிக்குடித்தனம் (கிழக்கு கடற்கரை சாலை) போனாராம் விஜய்.
- கூட்டுக் குடும்பமாய் இருந்தபோது தன் மனைவி அருகில் அம்மா-அப்பா இருப்பதால் தாமதமாக செல்வதும் சில நேரங்களில் சூட்டிங்கிலேயே இருந்துள்ளார்.
- தனிக்குடித்தனம் வந்த பிறகுதான, (சங்)கீதாவையும் குழந்தைங்களையும் பார்க் ஓடிவிடுகிறார்.
- என்னதான் மனைவி அன்டர்ஸ்டாண்டிங்கோட இருந்தாலும் நாம் அவர்களிடம் நடந்து கொள்ளும் விதம்தான் அவர்களுக்கு முழு நம்பிக்கையைத் தரும் என்கிறார்.
- அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் கீதாவே தனக்கு மனைவியாக வரவேண்டுமாம். ‘கீத்’ என்று மனைவியை செல்லமாக அழைக்கிறார்.
- ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகம் பேச மாட்டார். தன்னை பற்றி எந்த கிசுகிசுவும் வராத அளவு நடந்து கொள்ளும் ஒரே ஹீரோ.
- இப்பவும் தன் ஹீரோயின்களை தன் மனைவியிடம் அறிமுகம் செய்து வைக்கிறார்.
- ஏதாவது அன்பளிப்பை தன் மனைவிக்கு கொடுக்க நினைத்தாலும் தன் மனைவியே செலக்ட் செய்ய சொல்லிடுவாராம்.
- ஒருவேளை அவருக்கு பிடிக்கவில்லையென்றால் இவருக்காக அவர் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டாகும். அதை தவிர்ப்பதற்காக இந்த ஐடியாவாம்.
- விஜய் படங்களுக்கு காஸ்ட்டியூம் டிசைனர் இவரது மனைவி சங்கீதாதான்.
- இவரது குழந்தைகள் சஞ்சய், சாஷா ஆகியோரின் ஒவ்வொரு பிறந்த நாளையும் வீடியோவாக எடுத்து அதனை சேர்த்து வைத்துள்ளார்.
- பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கு அதனை கொடுக்க இருக்கிறாராம்.
- வேட்டைக்காரன் படத்தில் தன் மகனையும், தெறி படத்தில் தன் மகளையும் நடிக்க வைத்துவிட்டார்.
- அம்மாவின் கச்சேரிகளுக்கு எப்போதும் முதல் ஆளாக ஆஜராகிவிடுவார்.
- விஜய்க்கு இருந்த ஒரே உறவு அவரது தங்கை வித்யா. ஆனால் சிறுவயதிலேயே அவர் இறந்துவிட்டார். வித்யா மீது மிகவும் பாசமாக இருந்தார் விஜய்.
- இன்று தமிழகத்தில் இவருக்கு கோடிக்கணக்கான தங்கைகள் இருக்கின்றனர். இவரை விஜய் அண்ணா என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.
- இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் நாயகனின் பெயர் விஜய் என்றே இருக்கும்.
- சுக்ரன் படத்திற்காக இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியபோது அவருக்கு விஜய் ஆண்டனி என்றே பெயர் வைத்தார்.
- படப்பிடிப்பு சமயத்தில் அமைதியானவர் விஜய். ஆனால் காட்சியில் இறங்கிவிட்டால் அதிரடிதான். இதான் இவரது ஸ்பெஷாலிட்டி.
- காதலுக்கு மரியாதை படத்தில் நடித்தற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார்.
- தனக்கு ஏற்ற பல கெட்டப்புகளில், ரகசியமாக போட்டோசூட் எடுத்து வைத்திருக்கிறார்.
- ரசிகன் படத்தில் “பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி…” என்ற பாடலை தேவாவின் இசையில் முதன் முதலாக பாடினார்.
- இன்றுவரை 30 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அத்தனையும் செம ஹிட்டு.
- பெரியண்ணா படத்தில் சூர்யாவுக்காகவும், வேலை படத்தில் விக்னேஷுக்காவும் பாடியிருக்கிறார்.
- பிடித்த கலர் கருப்பு என்பதால் எத்தனை கம்பெனி கார்கள் வாங்கினாலும் கலரை மாற்றுவதில்லை.
- தங்கத்தில் நகைகள் அணியும் பழக்கம் இல்லை.
- தமிழ்நாட்டில் ரசிகர் மன்றங்களை பலமாக வைத்திருப்பவர் விஜய் ஒருவர்தான்.
- சென்னையில் இருந்தால் மாதத்தில் ஒருமுறையாவது ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களை சந்தித்து விடுவார்.
- தமிழ் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். தெலுங்கு, இந்தி என பட வாய்ப்புகள் வந்தபோதும் மறுத்துவிட்டார்.
- ‘ரவுடி ரத்தோர்’ படத்தில் அக்ஷய் குமாருடன் ஒரு பாட்டுக்கு ஆடினார். அதுவும் பிரபுதேவா மிகவும் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதற்காக ஆடினாராம்.
- பொதுவாக எல்லோரையும் “வாங்கண்ணா” என்று அழைக்கும் விஜய் நண்பர்களை மச்சி என்றுதான் அழைப்பாராம்.
- ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் விஜய். ரஜினி சார் மட்டுமே எவர்க்ரீன் சூப்பர் ஸ்டார் என்று அடிக்கடி கூறுவார்.
- கோலிவுட்டில் ரஜினிக்கு அடுத்து அதிகம் சம்பளம் பெறும் நடிகர் விஜய் மட்டுமே.
- இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் ஹோம் தியேட்டரில் ஏதாவது ஒரு ஆங்கிலப் படத்தை பார்த்துவிட்டுத்தான் தூங்குவாராம்.
- படப்பிடிப்பு முடியும்போது தன்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் அன்பளிப்பு கொடுப்பது இவரது வழக்கம்.
- தான் பிறந்த எழும்பூர் அரசு மருத்துமனைக்கு சென்று தன் பிறந்தநாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
- சமீபகாலமாக படங்களில் தன் கெட்டப்பை மாற்றியும் அதே சமயத்தில் தன் ஒரிஜினல் நரைத்த தாடி கெட்டப்பிலும் நடித்து வருகிறார்.
- விரைவில் அரசியலில் இறங்குவார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
- அண்மையில் நடைபெற்ற மக்களின் பல போராட்டங்களுக்கு நேரிடையாக ஆதரவு கொடுத்து வருகிறார்.
- ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, நள்ளிரவில் சென்னை மெரினா பீச்சுக்கு சென்று வந்தார்.
- நம் இந்திய நாடு வல்லரசு ஆவதை விட விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து ஒரு நல்லரசாக உருவாக வேண்டும் என குரல் கொடுத்தார்.
மெர்சல் ஹீரோ விஜய் அவர்களை ரசிகர்கள் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம்.